தீபாவளிக்கு முன்னாடியே சர்கார் படம் ரிலீசாகிறதா?
சர்கார் படம் தீபாவளிக்கு முன்னாடியே வரும் நவம்பர் 2ம் தேதியே ரிலீஸ் செய்ய பிற மாநில விநியோகஸ்தரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகிபாபு, கரு.பழனியப்பன், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சர்கார். வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி சரவெடியாக இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, இப்படத்தை வாங்கியுள்ள வெளிநாட்டு மற்றும் பிற மாநில விநியோகஸ்தரர்கள், படத்தை நவம்பர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமையே ரிலீஸ் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் (தீபாவளி) மற்றும் அந்த வாரமும் வசூலை வாரிக் குவிக்கலாம் என்ற நோக்கில் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.
இவர்களது இந்த கோரிக்கையை சன் பிக்சர்ஸ் பரிந்துரைக்குமா என்பது விரைவில் தெரியவரும். தமிழகத்தில் தீபாவளியன்று படம் வெளியாவது உறுதியானால், மற்ற பகுதிகளில் முன்பே படம் ரிலீஸ் செய்யப்பட்டால், படத்தின் பைரசி இணையதளங்களில் எளிதில் உலாவும் என்பதால், சர்கார் படக்குழுவினர் எந்த முடிவை எடுப்பது என்று யோசித்து வருகின்றனர்.