அமைச்சர் ஜெயக்குமார் ஃபேன்ஸ் வெற்றிவேலுக்கு அதிரடி பதில்!
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசும் ஆடியோ என ஒரு வீடியோ வைரலாக பரவிவந்தது மேலும் ஒரு பர்த்சர்டிபிகேட்டும் பரவியது.
அந்த ஆடியோவில் இடம் பெற்ற குரல் தன்னுடையது அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துவிட்டார். ஆனால் விடாமல் தினகரன் தரப்பு MLA வெற்றிவேல் தொடர்ந்து அமைச்சர் மீது குற்றசாட்டி வருகிறார். ஜெயக்குமார் ஃபேன்ஸ் ஒரு பர்த்சர்டிபிகேட் தயார் செய்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ஜெயக்குமார் ஃபேன்ஸ் என்னும் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கம் ஒன்றில் "ஒருவர் பெயரில் பர்த் சர்டிபிகேட் வாங்குவதெல்லாம் பெரிய விஷயமா? அப்பா என்பவர் நேரில் ஆஜராகவேண்டிய அவசியமில்லாத நிலையில், யார் பெயரில் வேண்டுமானாலும் சர்டிபிகேட் வாங்கமுடியும்" என்று பதிவிட்டுருப்பதோடு, போலி என்றே அறிவித்துவிட்டு அப்பா என்ற இடத்தில் வெற்றிவேல் பெயரைப் போட்டு ஒரு பெர்த் சர்டிபிகேட்டையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
அத்தோடு இல்லாமல், "தேவைப்பட்டால் எங்களால் வெற்றிவேல் பேசியதைப்போன்ற ஆடியோவையும் வெளியிடமுடியும்" என்கிறார்கள் அமைச்சர் ஜெயகுமாரின் ஃபேன்ஸ் என்ற பெயரில் இயங்கிவரும் ட்விட்டர்காரர்கள்.