விஸ்வாசம் செகண்ட் லுக் நாளை ரிலீஸ்!
அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் திரைப்படத்தின் செகண்ட் லுக் நாளை காலை 10.30 மணிக்கு ரிலீசாகவுள்ளது.
வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிவா – அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.
யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பொங்கல் வெளியீடாக வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகி வைரலான நிலையில், படத்தின் செகண்ட் லுக் நாளை காலை 10.30 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
விஸ்வாசம் திருவிழா என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்கள் இப்போதே இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர். இரட்டை தலை கெட்டப்பில் விஸ்வாசம் படத்தின் முதல் போஸ்டர் வெளியானது.
அதனை தொடர்ந்து, மலேசியா சிறைச்சாலையில் தூக்குத் துரை கதாபாத்திரத்தில் அஜித் சண்டையிடுவது போன்ற புகைப்படங்கள் லீக் ஆகின. இந்நிலையில், செகண்ட் லுக் எப்படி இருக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கிடக்கின்றனர்.