வேலை இல்லா பட்டதாரி படத்தில் தனுசுடன் நடித்த கஜோல்!
வேலை இல்லா பட்டதாரி படத்தில் நடிகர் தனுஷ்சுடன் பிரபல இந்தி நடிகை கஜோல் நடித்துள்ளார்.
தமிழகத்தில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், 'வேலை இல்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், பிரபல ஹிந்தி நடிகை கஜோலும் பங்கேற்றார். விழாவில் பேசிய தனுஷ், ''விஐபி -3ம் பாகத்திலும் நடிகை கஜோல் நடிக்கவுள்ளார். ஆனால், நான்காம் பாகத்தில் நடிப்பரா என என்னால் உறுதியளிக்க முடியாது. கஜோல், நடித்த மின்சாரக்கனவு படம் வெளியான போது, நான் பத்தாம் வகுப்பு படித்தேன். அவரின் நடிப்பைப் பார்த்து பிரமித்துப் போனேன்'' என்றார்.
தனுசுடன் இணைந்து பணியாற்றியது குறித்து பேசிய கஜோல், தனுசுடன் 'இணைந்து பணியாற்றியது அற்புதமானத் தருணம் ' என்றார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கஜோல் தமிழ்படத்தில் மீண்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலை இல்லா பட்டதாரி படத்தின் பாகம் 2 ஜூலை 28ம் தேதி வெளியாகிறது.