அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு! மத்திய அரசு விளக்கம்

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் அதிகார மோதல் காரணமாக கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதனை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு வரும் 26ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதாவது மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் பரிந்துரையின் படியே சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் கூறுகையில் முக்கிய புகார்கள் குறித்த விசாரணையில் அலோக் வர்மா ஒத்துழைக்க மறுத்துள்ளார்.

வழக்கு பற்றிய கேள்விகளுக்கு அலோக் வர்மா பதில் தரவில்லை. எந்தவித ஆவணமும் தரவில்லை. பலமுறை கால அவகாசம் அளித்தும் அலோக் வர்மா உரிய பதிலை அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

 

More News >>