மாணவனின் தலை முடியை வெட்டிய தலைமை ஆசிரியர்!
திருவண்ணாமலை அருகே மாணவனின் தலை முடியை வெட்டிய தலைமையாசிரியரை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியர் மேல்நிலைப்பள்ளி இந்த பள்ளியில் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில், பையூர் கிராமத்தை சேர்ந்த டெல்லிகணேஷ் என்ற மாணவர் பிளஸ்-2 படித்து வருகிறார். தலையில் முடி அதிகமாக வளர்ந்து இருப்பதாக கூறி, டெல்லிகணேஷை அழைத்த தலைமை ஆசிரியை மகேஸ்வரியை தலைமுடியை வெட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் டெல்லிகணேஷ் நடந்த சம்பவத்தை தன்னுடைய பெற்றோரிடம் சொல்லியுள்ளார்.
ஆத்திரம் அடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி தலைமையாசிரியை மகேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், தலைமையாசிரியை மகேஸ்வரி முடி நீளமாக உள்ளதால் நாங்களே மாணவனின் தலைமுடியை வெட்டினோம் என்றும் மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் வெட்டினோம் என்று பெற்றோரிடம் தெரிவித்தார்.