பகல் கனவு ஒரு போதும் பலிக்காது! ஓ.பன்னீர்செல்வம்

மதுரையில் அம்மா பேரவை சார்பில் மகளிருக்கு 3 ஆயிரம் சைக்கிள்கள் வழங்கும் விழாவில் மாபெரும் சைக்கிள் பேரணியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற துரோகிகள், எதிரிகளின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் மிதிவண்டிப் பேரணியை துவக்கி வைக்கும் விழா மதுரை சுற்றுச்சாலையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் சுயநலத்தோடு ஆட்சி காணாமல் போகும் என்று பேசுவதாக சாடினார். பின்னர் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, துரோகியும் எதிரியும் அதிமுகவுக்கு எதிராக கைகோர்த்து வந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

More News >>