திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!
திமுக தலைவர் கருணாநிதியை புதிதாக கட்சித் தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார்.
தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகளில் ஒருவரான முன்னாள் கடந்த 2016ஆம் ஆண்டு மறைந்தார். மற்றொருவரான திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நலக் குறைவால் பொதுவெளிகளில் தலைகாட்டுவதை தவிர்த்து வருகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலைகளுக்கிடையில் நீண்ட காலமாக, அரசியலில் ஈடுபடுவதில் காலம் தாழ்த்தி வந்த நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என அறிவித்து அரசியல் சூட்டை கிளப்பி இருக்கிறார்.
இந்நிலையில், சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை சந்திக்க இருக்கிறார். கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ரஜினி மும்மரமாக ஈடுபட்டுள்ள நிலையில் சந்திப்பு நடக்கிறது.
உடல்நலம் குறித்து விசாரிக்கவும், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் கருணாநிதியை ரஜினி சந்திக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.