நவ.28ல் மிசோரம் தேர்தல்: பலம் வாய்ந்த காங்கிரஸுடன் மோதும் பா.ஜ.க

பிரதமர் மோடி பதவி ஏற்ற பிறகு, பாஜக முதல் முறையாக மிசோரத்தில் தேர்தலை எதிர்கொள்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒத்திகையாக பா.ஜ.க. மிசோரத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மிசோரம் மாநில சட்டசபைக்கு வரும் நவம்பர் மாதம் 28ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 40 இடங்களை கொண்ட மிசோரம் மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியே கடந்த இரண்டு முறைகளும் பெரும் பான்மையுடன் வெற்றி பெற்றது. 2008 மற்றும் 2013ல் நடந்த தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது காங்கிரஸ்.

2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கூட காங்கிரஸ் கட்சியே வெற்றி கொடி நாட்டியது. 2008 மற்றும் 2013ல் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த லால் தன்ஹவ்லாவை இந்த முறையும் முதல் வேட்பாளராக முன்னிறுத்தி 40 தொகுதிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலை எதிர்கொள்கிறது காங்கிரஸ்.

மோடி 2014ல் ஆட்சியை பிடித்து 4 வருடம் கழித்து தற்போது மிசோரம் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க வின் பலம் என்ன என்பது தெரிந்துவிடும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு மிசோரம் சட்டசபை தேர்தல் ஒரு மாதிரி தேர்தல் போல் பா.ஜ.க கருத வேண்டும். ஆதலால் மிசோரம் தேர்தல் நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>