திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்: தேர்தலுக்கு ஆயத்தமா?

அக்டோபர் 25ம் தேதி (வியாழன்) திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொது செயலர் க. அன்பழகன் அறிவித்திருந்தார்.     திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதி மறைந்த பிறகு கட்சியின் செயல் தலைவரும் பொருளாளருமான மு.க. ஸ்டாலின், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   அதைத் தொடர்ந்து கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம் அக்டோபர் 18ம் தேதி நடந்தது. அக்டோபர் 25ம் தேதி மாவட்ட செயலர்களின் கூட்டம் கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.   சமீபத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களாக 80 பேரை திமுக தலைமை அறிவித்தது. மாவட்ட செயலர்களுடன் இப்பொறுப்பாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இக்கூட்டத்தில் விவாதிக்க இருக்கும் தலைப்புகள் எதுவும் கொடுக்கப்படாத நிலையில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் சேர்ந்து நடந்தால் எதிர்கொள்வது குறித்த ஆயத்தங்கள் குறித்து விவாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.   நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தலுக்கு ஆயத்தமாகி வருவது தெரிகிறது. கருணாநிதியின் மறைவுக்கு பின் வரும் முதல் தேர்தல் என்பதால் இதில் தன்னை திறமையான தலைவராக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு இருக்கிறது.
More News >>