இந்தியாவை அலற விட்ட மேற்கிந்திய அணி டிராவில் முடிந்த வரலாற்று சிறப்பு மிக்க போட்டி!

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியை போராடி டிரா செய்தது மேற்கிந்திய அணி.

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டி வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த போட்டியில் வெல்வதற்காக போராடிய மேற்கிந்திய அணி போட்டியை டிரா செய்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் விராத் கோலி அபாரமாக விளையாடி அவுட் ஆகாமல் 157 ரன்கள் விளாசினார்.

மேலும், அதிவேகமாக 10,000 ரன்களை கடந்து சச்சினின் உலக சாதனையை கோலி முறியடித்தார். ஆனால், கோலி மற்றும் அம்பத்தி ராயுடுவை தவிர மற்ற வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் இந்திய அணி 321 ரன்கள் எடுத்தது.

322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அபாரமாக ஆடி சேஸ் செய்ய முனைந்தது மேற்கிந்திய அணி.

அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர், ஷிம்ரான் ஹெட்மயர், 64 பந்துகளில் 94 ரன்கள் விளாசி சதத்தை நெருங்கும் தருவாயில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர். மற்றொரு புறம், விக்கெட் கீப்பர் சாய் ஹோப், தனது பொறுப்பை உணர்ந்து இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் 134 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

மறுபுறம் இந்திய அணியின் பவுலர்கள் மேற்கிந்திய அணி வீரர்களின் விக்கெட்டுகளை சாய்க்க பெரும் முயற்சி மேற்கொண்டும் தோல்வியை தழுவினர்.

இறுதியில் 50வது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 321 ரன்கள் எடுத்து வெற்றியை இழந்து தோல்வியை தழுவாமல் ஆட்டத்தை டிரா செய்தது. தொடர் தோல்விகளில் இருந்து மேற்கிந்திய அணி போராடி டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ள 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றி கோப்பையை வெல்லும். புதிய சாதனைகளை படைத்த விராத் கோலி ஆட்டநாயகனாக தேர்வானார்.

More News >>