சுசிகணேசனுக்கு எதிராக அமலாபால் பாலியல் புகார்! #MeToo

எழுத்தாளர் மற்றும் சுசி கணேசனின் உதவி இயக்குநரான லீலா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் அமலாபால்.

திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே 2 படங்களை இயக்கிய சுசி கணேசன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த லீலா மணிமேகலை #MeTooவில் குற்றம் சுமத்தி இருந்தார். இது அப்பட்டமான பொய் எனக் கூறி அவர் மீது மான நஷ்ட வழக்கையும் சுசி கணேசன் போட்டுள்ளார்.

இந்நிலையில், சுசி கணேசன் இயக்கத்தில் திருட்டுப்பயலே 2ம் பாகத்தில் நாயகியாக நடித்த அமலாபால், நான் லீலா மணிமேகலைக்கு ஆதரவாக நிற்கிறேன். ஏனென்றால், சுசி கணேசன் மிகவும் தவறானவர். படப்பிடிப்பின் போது, சிலருக்கு தன்னை பாலியல் இச்சைக்காக பரிந்துரை செய்தார் மேலும், தேவையில்லாமல் என்னை உரசி உரசியே பேசுவார். இதுபோன்ற பாலியல் தொல்லைகளை அவரது படப்பிடிப்பு தளத்தில் நான் அனுபவித்தேன். எனக்கே இத்தனை தொந்தரவு என்றால், லீலா மணிமேகலையின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நான் உணர்கிறேன் என நேற்று ட்விட்டர் பதிவில் அறிக்கை வெளியிட்டார்.

மேலும், நேற்று இரவு, தனக்கு சுசி கணேசன் போன் செய்து ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும், நான் என் நிலைபாட்டை புரிய வைக்க முயலும் போது, என்னை இழிவு படுத்தியதாகவும், அவரது மனைவி மஞ்சரி அதைக் கேட்டு சிரித்ததாகவும் மற்றொரு குற்றச்சாட்டு பதிவையும் ட்விட்டரில் அமலாபால் தெரிவித்துள்ளார்.

இதனால், இந்த சர்ச்சை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. திருட்டுப் பயலே 2 ஆடியோ வெளியீட்டு விழாவில், இதற்கு நேர்மாறாக சுசி கணேசனின் புகழ்ந்து அமலா பால் பேசிய வீடியோவை நெட்டிசன் ஒருவர் அவரது பதிவுக்கு கீழ் கமெண்ட் செய்து, இதற்கென்ன சொல்கிறீர் என்ற கேள்விக்கு அமலா பால் பதில் கூறவில்லை.

அமலா பாலின் இந்த ஓபன் ஸ்டேட்மென்ட்டுக்கு சுசி கணேசன் என்ன பதில் அளிக்கவுள்ளார் என்பது தெரியவில்லை. மேலும், சுசி கணேசன் போன் செய்து ஆபாச வார்த்தைகளால் திட்டியதை அமலா பால் ரிகார்ட் செய்துள்ளாரா என்பதை அமலாபாலும் விளக்கவில்லை.

இன்னும் மீடூ விவகாரத்தில் எத்தனை பிரபலங்கள் தலை உருளப்போகிறதோ?

More News >>