விஸ்வாசம் செகண்ட் லுக் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

சிவா – அஜித் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். யோகிபாபு காமெடியில் கலக்கவுள்ளார். இமான் இசையில் துள்ளல் பாடல்களை கொடுக்கவுள்ளார்.

கிராமம் மற்றும் மலேசியா பின்ணணி கொண்டு படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரட்டை தலைகளை காட்டிய படக்குழு, இரண்டாவது லுக்கில், சிகப்பு சட்டை, வேட்டியில், அஜித் புல்லட்டில், திருவிழா பேக் ரவுண்டில், முக்கியமாக தலையில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு இரண்டு கைகளையும் விட்டு ஓட்டிக் கொண்டு ஹாப்பியாக வருகிறார்.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஸ்வாசம் திரைக்கு வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பேட்ட படம் பொங்கலுக்கு வந்தால், ரஜினி – அஜித் போட்டி உறுதியாகிவிடும். போஸ்டர் ரிலீசை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More News >>