எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு- எதிர்ப்பு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயக விரோதமானது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தீர்ப்பு குறித்து கவலையில்லை. ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பது திமுகவின் கொள்கை. எனவே, காலியாக உள்ள 20 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதே எங்களது எதிர்பார்ப்பு" என்று கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,இந்த தீர்ப்பு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கட்சி தாவல் சட்டத்தின் கீழ் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். ஒரே கட்சியில் இருந்து கொண்டு ஆளுநரை சந்தித்து முதலமைச்சரை மாற்ற வேண்டும் என அதிருப்தியை தெரிவித்தனர். இந்த தீர்ப்பு முற்றிலும் நேர்மாறாக உள்ளது." என்றார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,"இந்த தீர்ப்பு தமிழ்நாட்டின் துரதிஷ்டமாகும். நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அதிமுக அரசு தற்காலிகமாக தப்பிப் பிழைத்துள்ளது. மக்களால் மிக விரைவில் இந்த ஆட்சி தண்டிக்கப்பட்டே தீரும் என உறுதியாக நம்புகிறோம்" என விமர்சித்துள்ளார்.

More News >>