தமிழகத்தில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் ?

காலியாக உள்ள தொகுதிகளில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்றும், இடைத்தேர்தலை நடத்த தடை இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்பட தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எந்நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், "காலியாக உள்ள தொகுதிகளில் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. அதற்குள் தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்" என்றார்.

 

More News >>