எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு- அதிமுகவினர் கொண்டாட்டம்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடடி மகிழ்ந்தனர்.

தீர்ப்பு வெளியான அடுத்த நொடியே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் களைகட்ட தொடங்கிவிட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்பட அனைவரும் அதிமுக அலுவலகத்தில் ஒன்று கூடினர்.

பின்னர், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவினர், பட்டாசு வெடித்து தங்களது வெற்றியைக் கொண்டாடினர். ஆலந்தூரில் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து பட்டாசு வெடித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.

தர்மபுரி மாவட்ட அதிமுக அலுவலத்தில் திரண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர். அப்போது, முதலமைச்சருக்கு ஆதரவாகவும், டிடிவி தினகரனுக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

More News >>