பேட்ட ரஜினிக்கு இவர்தான் வில்லியாம் !
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக அண்மையில் ரஜினி பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில், பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லியாக மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் வில்லனாக வரும் விஜய்சேதுபதியின் மனைவி கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா நடித்துள்ளனர். மேலும், நவாசுதின் சித்திக், பாபி சிம்ஹா, சசிகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பேட்ட படம் வரும் பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசத்துக்கு போட்டியாக ரிலீசாகவுள்ளதாக தெரிகிறது.