பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசிக்கு பரோல்
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, அவர் வெளியில் வர இருக்கிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இவர்கள் மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
சசிகலா ஏற்கனவே இரண்டு முறை பரோலில் சென்னை வந்து சென்ற நிலையில், தற்போது இளவரசி பரோலில் வெளியில் வர இருக்கிறார்.
இளவரசியின் சகோதரரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், அவரை பார்க்க பரோல் வழங்க வேண்டும் என்று இளவரசி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த கர்நாடக சிறைத்துறை இளவரசிக்கு பரோசல் வழங்க அனுமதி அளித்தது.
இதையடுத்து, இளவரசி விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.