ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராம் முடக்கம் !
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர்.
நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் நேற்று முன் தினம் முடக்கப்பட்ட நிலையில், தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் என்ஜிகே மற்றும் கார்த்தியின் தேவ் படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பிறந்த நாள் அண்மையில் கொண்டாடப்பட்டது. பிறந்த நாளை முன்னிட்டு, தெலுங்கில் உருவாகி வரும் என்டிஆர் படத்தில் நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டார்.
இது ஸ்ரீதேவியா அல்லது ஸ்ரீரெட்டியா என நெட்டிசன்கள் மீம்களால் அவரை கலாய்த்து தள்ளினர். இந்நிலையில், தற்போது ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
விஷமிகள் பதிவிடும் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு யாரும் ஆதரவு அளிக்க வேண்டாம் என ரகுல் கேட்டுக் கொண்டுள்ளார்.