வேலை செய்யும் இடத்தை நாம தான் சுத்தம் செய்யவேண்டும்: டாப்ஸி அதிரடி!
மீடூ விவகாரம் பாலிவுட்டில் தொடங்கி, கோலிவுட் வரை பூதாகரமாக வெடித்து வருகிறது. பல பிரபலங்கள் இதில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர்.
பசுந்தோல் போர்த்திய பல புலிகள் இன்று கருப்பு ஆடுகளாக கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகை டாப்ஸி, நமக்கு ரொட்டியும், வெண்ணையும் தரும் இந்த சினிமா தொழிலில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். நாம் வேலை செய்யும் இடத்தை நாம் தான் சுத்தம் செய்தாக வேண்டும்.
இந்த மீடூ இயக்கம் தவறான பாதையில் செல்லாமல், சரியான சவுக்கடியாக பெண்களை துஷ்பிரயோகம் செய்பவருக்கு இருக்க வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.