நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.255 கோடி சொத்துக்கள் முடக்கம்

ஹாங்காங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமான வைர நகைகள் உள்பட ரூ.255 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கி உள்ளது.

பிரபல தொழில் அதிபர் நிரவ் மோடி. இவர்கள், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, நிரவ் மோடி, மற்றொரு அதிபரான மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பி தலைமறைவாகினர்.

நிரவ் மோடிக்கு எதிராக, அமலாக்கத்துறை நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நிரவ் மோடியின் சொத்துகள் ஒன்வொன்றாக முடக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஹாங்காங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமான விலை உயர்ந்த பொருட்கள், வைர நகைகள் உள்பட சுமார் ரூ.255 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இதுதொடர்பான உத்தரவு நகலை ஹாங்காங் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>