தேவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடித்துள்ள தேவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லட்சுமணன் தயாரிப்பில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள தேவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா வெளியிட்டார்.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மட்டுமே மீதம் உள்ளதாக அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் தெரிவித்துள்ளார். அண்மையில், குலு மணாலியில் ஏற்பட்ட காட்டு வெள்ளத்தில் தேவ் படக்குழு சிக்கியது அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறியது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் தயாரிப்பாளருக்கும் இதனால் ஒன்றரை கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறினர்.

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றால், அந்த நஷ்டம் சரியாகி விடும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தீரன் படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தில் கார்த்தி போலீசாக நடிக்கிறார். பைக் அருகே ஜெர்க்கின் அணிந்தபடி யாரையோ முறைத்தபடி கம்பீரமாக நிற்கிறார் கார்த்தி.

விரைவில், படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

More News >>