ஜி.வி. பிரகாஷின் ஐங்கரன் டீஸர் ரிலீஸ்!

அதர்வாவின் ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் படத்தின் டீஸர் ரிலீசாகியுள்ளது.

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ்-க்கு ஜோடியாக குற்றம் 23 படத்தின் நாயகி மஹிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன், ஹரிஷ் பெரடி, அபிஷேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்ஜினியர் படிக்கும் மாணவனுக்கு ஏற்படும் விசித்திரமான பிரச்சனையால், அவனது வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை மையமாக வைத்து இயக்குநர் ரவி அரசு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ஐங்கரனை உருவாக்கியுள்ளார்.

ரொமான்ஸ் மற்றும் காமெடி கதாநாயகனாக வலம் வந்த ஜி.வி. பிரகாஷை இப்படத்தின் மூலம் ஆக்‌ஷன் நாயகனாக ரவி அரசு மாற்றியுள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் விரைவில் ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

More News >>