கன்னட மொழி கோப்புகளை மட்டுமே பார்ப்பேன்- குமாரசாமி அதிரடி

நவம்பர் 1-ஆம் தேதி, கன்னட மொழியில் இல்லாத அரசுக் கோப்புக்களை பார்க்கப்போவதில்லை என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

கன்னடத்தில் இல்லாத கோப்புக்களைத் தனக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். கடந்த 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதை அடுத்து கர்நாடகா தனி மாநிலமாக உதயமானது.

கர்நாடக அரசு ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதியன்று மாநில உதய தினமாக (ராஜ்யோத்சவா) கொண் டாடி வருகிறது. அந்த நாளில், கன்னட மொழி, வரலாறு, பண்பாடு, கலை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், நவம்பர் 1 முதல் கன்னட மொழியில் இல்லாத மாநில அரசுக் கோப்புகளைப் பார்க்க மாட்டேன்; கன்னடமொழியில் இருக்கும் கோப்புகளை மட்டும் பார்த்து கையெழுத்திடுவேன் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

கன்னட மொழியில், இல்லாத கோப்புகளை ஒப்புதல் அளிக்காமல் சம்பந்தப்பட்ட துறைக்கே திருப்பி அனுப்பி விடுங்கள் என் றும் தனது அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

More News >>