ஜப்பானில் இன்று 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: மக்கள் பீதி
ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ என்ற தீவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். உலகிலேயே மிகவும் ஆபத்தான நிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகளில் ஜப்பான் நாடும் ஒன்றாகும். ஜப்பானில் ஏற்படும் நிலநடுக்கங்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜப்பானின் ஹொக்கைடோ தீவின் ராவுசு பகுதியில் இருந்து 60 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவு 5.6 ஆக பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜாகின்தோஸ் தீவில் நேற்று 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தீவினவ் தென்மேற்கில் பூமிக்கடியில் 35.9 கிமீ ஆழத்தில், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால், மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற பீதியில் மக்கள் உறைந்துள்ளனர்.