தொடரும் திருட்டு கதை பிரச்னை சர்காரையும் விட்டுவைக்கவில்லை!
மீண்டும் திருட்டுக் கதை பிரச்னை தலை தூக்கியுள்ளது இயக்குனர் முருகதாஸ் மீது.
நடிகர் விஜய் - சமந்தா நடித்து, சமீபத்தில் வெளியான கத்தி படத்தின் கதை, திருட்டு கதை பிரச்னையில் சிக்கியது. சென்னையை சேர்ந்த சினிமா உதவி இயக்குனர் கோபி கத்தி படத்தின் கதை தன்னுடையது என்றும், ஏர்.ஆர்.முருகதாஸ் திருடி படம் எடுத்து விட்டார் என்றும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இப்பொழுது மீண்டும் முருகதாஸ் கதை திருடிவிட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் சர்கார் கதைத்திருட்டு தொடர்பாக வெளியாகியுள்ள தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் லெட்டர் பேடு மிகப்பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பொதுச்செயலாளர் மனோஜ்குமார், தலைவர் கே.பாக்கியராஜ் ஆகியோரின் கையெழுத்துகளுடன் வெளியான அக்கடிதத்தின் கடைசி பக்கம் மட்டும் வலைதளங்களில் படுவேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அக்கடித்தத்தில் “ஒரு சிலரின் கருத்து வேறுபட்டிருந்தாலும் பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்துகளின் அடிப்படையில் வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையும் ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ கதையும் ஒன்றே என்று சங்கம் முடிவு செய்கிறது.
உங்கள் பக்க நியாயத்துக்காக நீங்கள் (வருண் ராஜேந்திரன்) அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதை நாங்கள் தடைசெய்ய மாட்டோம். முழுமையாக தங்களுக்கு உதவமுடியாமைக்கு வருந்துகிறோம்” என்று முடிகிறது அந்தக்கடிதம்.
கத்தி திரைப்பட கதை திருட்டு வழக்கில் கோபி வழக்கை திரும்பபெறும்வரை அமைதியாக இருந்த இயக்குனர் முருகதாஸ்,கோபி பொய் சொல்கிறார் என்பது இப்போது கோர்ட்டில் நிரூபணமாகிவிட்டது. இந்த தீர்ப்பு வருவதற்காகத்தான் நான் இவ்வளவு நாளும் மவுனம் காத்தேன் என்று கூறினார் முருகதாஸ் என்பது குறிப்பிடதக்கது.இந்த பிரச்சனையில் எப்பொழுது பதில் சொல்கிறார் என்று பார்ப்போம்