சாலையில் திரியும் மாடுகள்... இனி உரிமையாளருக்கு அபராதம்!

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரியும் மாடுளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் அதன்போக்கிற்கே விடப்படுகின்றன.

மாடுகள் நகரின் பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக படுத்துக்கிடப்பதையும், சாலைகளில் வலம்வருவதையும் அடிக்கடி பார்க்க முடிகின்றது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றித் திரிந்தால் அதன் உரிமையாளர்களிடம்10 ஆயிரத்து 750 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு, பிடிபடும் கால்நடைகளுக்கு அடையாளமாக காதுமடல்களில் முத்திரை வில்லை பொருத்தப்படும் எனவும் அதன்பின் மீண்டும் மாடுகள் பிடிப்பட்டால், உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>