சிபிஐ இயக்குநர் நாகேஷ்வர ராவ் சொந்தமாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது-உச்ச நீதிமன்றம்

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கப் பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி மேல் கேள்வி வைத்துள்ளது.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் அதிகார மோதல் காரணமாக கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட்டது. 

மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே ஊழல் புகார் எழுந்ததை அடுத்து அலோக் வர்மாமை நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது. சிபிஐ வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது.

ரஃபேல் ஊழல் உள்ளிட்ட ஏழு முக்கிய ஊழல்களை விசாரித்து வந்தவர் அலோக் வர்மா. இதனாலேயே அவஎ மீது ஊழல் புகார் அளிக்கப் பட்டதாக எதிர்கட்சிகள் மத்திய அரசு மீது குற்றஞ் சாட்டி வருகின்றன.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் அல்லோக் வர்மா மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டது. அதற்கு பதிலளிக்க மத்திய விஜிலென்ஸ் கமிஷன் கால அவகாசம் கேட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் 14 நாட்கள் அவகாசம் கொடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

மேலும் தற்காலிக சிபிஐ இயக்குநர் நாகேஷ்வர ராவ் சொந்தமாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றும், அவர் எடுக்கும் முடிவுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More News >>