ஜப்பானில் சர்வம் தாள மயம் ரிலீஸ் ஏ.ஆர். ரஹ்மான் அறிவிப்பு!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள சர்வம் தாள மயம் படம் ஜப்பானில் வரும் அக்டோபர் 28ஆம் தேதி ரிலீசாகிறது.

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் படங்களை இயக்கிய இயக்குநர் ராஜீவ் மேனன் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் சர்வம் தாள மயம் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் டோக்கியோவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட திருவிழாவில் வரும் அக்டோபர் 28ஆம் தேதி மாலை 6.15(ஜப்பான் நேரம்)மற்றும் அக்டோபர் 30ஆம் தேதி இரவு 8.25 மணிக்கு திரையிடப்படுகிறது.

இந்த செய்தியை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார்.

கிறிஸ்துவ இளைஞரான பீட்டர், எப்படி கர்நாடக சங்கீதத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக மாறுகிறார் என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

More News >>