தமிழகத்தில் இடைத்தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம் !

திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றால் 18 தொகுதிகளுக்கும் ஜனவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மதுரை- திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஏ.கே.போஸ் கடிந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதேபோல் திருவாரூர் தொகுதி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ கருணாநிதி மறைவுக்குப் பிறகு அந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு தொகுதிகளிலும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறுமா என்று அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவி வந்த நிலையில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை  டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதின்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் சபாநாயகரின் உத்தரவு தவறு என்பதை வெளி உலகுக்கு தெரிவிப்பதற்காகவாவது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றால், 18 தொகுதிகளுக்கும் ஜனவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

More News >>