தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தேர்தலில் போட்டியிடலாம் !

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில், 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயணன் நேற்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு டிடிவி தினகரனுக்கும், ஆதரவளித்த 18 முன்னாள் எம்எல்ஏக்களுக்கும் ஏமாற்றமளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் டிடிவி தினகரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இன்னும் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி அனைவரிடையே எழும்பியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:எம்எல்ஏக்களை எந்தெந்த குற்றங்களின் கீழ் தகுதி நீக்கம் செய்ய முடியும் என்பதை அரசியலமைப்பு சாசனத்தின் 191 (1) (2) உட்பிரிவு கூறுகிறது. ஆனால், 18 எம்எல்ஏக்களுக்கு நேரிட்டுள்ள நிலையை ஆராய்ந்தால், அவர்களை அடுத்தடுத்த தேர்தலில் போட்டியிட தடை செய்வதற்கான நேரடி சட்டங்களோ, சட்டப்பிரிவுகளோ இல்லை என்று தான் கூற வேண்டும்.

நாட்டிலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் யாரையும் தேர்தலில் போட்டியிட தகுதி இழப்புக்கு ஆளாக்கிய நிகழ்வும் நடைபெற்றதில்லை. இதவவால், இதில் விவாதங்கள் எழும்ப வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.மேலும், 18 எம்எல்ஏக்களுக்கும் அடுத்த தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்கக்கூடிய நேரடி சட்டங்கள் கிடையாது என்றும் அதனால் அவர்கள் சட்டமன்றம் உள்பட எந்த தேர்தலிலும் போட்டியிட முடியும் என்று முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.

More News >>