வாணியம்பாடியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து
வாணியம்பாடியில் கியாஸ் கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
வாணியம்பாடி அருகே கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமு. கூலித்தொழிலாளியான இவரது வீட்டில் நேற்று மாலை கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன்எதிரொலியால் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து வீடு முழுவதும் தீப்பற்றியது.
இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென அக்கம் பக்கள் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதனால், மொத்தம் 6 வீடுகள் தீயில் எரிந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.
இதற்கிடையே, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். தீ விபத்து குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு தாசில்தார் கிருஷ்ணவேனி, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், அதிமுக நகர செயலாளர் சதாசிவம், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.