முழுக்க முழுக்க இது ஆண்களுக்கு மட்டும்...

என்னடா இது முழுக்க முழுக்க ஆண்களுக்கானது மட்டும் என்று சொல்றேனு பார்க்கிறீர்களா? ஆமாங்க, இக்காலக்கட்டத்தில் அனைத்துமே பக்கவிளைவை ஏற்படுத்துகிறது அதிலும் மிக முக்கியமானவை ஆண்களின் மலட்டுத்தன்மை.

நாம் தினமும் பயன்படுத்துகின்ற சோப்பு மற்றும் பற்பசையில் அதிகம் வேதி இரசாயனங்கள் கலந்துள்ளது. இதனால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.

வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ‘4-மீதைல் பென்ஸில்டேன் கேம்பர்’ (4Mbc), சில வகை பற்பசைகளில் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு காரணியான ‘டிரைகுளோசன்’ ஆகியவை உள்பட பல்வேறு ரசாயனங்கள் ஆண்களுக்கு விந்தணுக்களைப் பாதிக்கின்றன.

இந்த இரசாயனங்கள் விந்தணுக்களை பாதிப்பதை உறுதி செய்யும் அளவுக்கு இதற்கு முந்தைய ஆய்வுமுறைகள் இல்லை. தற்போது புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாளமில்லா சுரபிகளை பாதிப்பவை என்று கூறப்படும் ரசாயனங்களை சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகின்றனர். மனிதனின் அன்றாடப் பயன்பாட்டிலுள்ள உணவு, துணிகள், சுகாதாரப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றில் ‘நாளமில்லா சுரப்பிகளைப் பாதிப்பவை’ எனக் கருதப்படும் ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

‘சிலவகை சோப்புகள், பற்பசைகள், கிரீம்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் சிலவகை ரசாயனங்கள், விந்தணுக்களில் உள்ள கால்சியத்தின் அளவை அதிகப்படுத்துகின்றன. அவற்றின் நீந்தும் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், கருமுட்டையைப் பாதுகாக்கும் கவசத்தைத் துளைத்து உள் நுழையும் திறனையும் குறைக்கின்றன'. எனவே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சோப்புகள், பற்பசையை பயன்படுத்துங்கள். நீண்ட ஆயுளை பெறுங்கள்.

More News >>