ராஜபக்சே இலங்கை பிரதமராக பதவி ஏற்றார்
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு இலங்கை விடுதலை கட்சி, ஒருங்கிணைந்த தேசிய கட்சி இணைந்து ஆட்சி அமைத்தது. அதன்படி, மைத்திரிபால சிறிசேனா அதிபராக பதவி ஏற்றார். ரணில் விக்ரமசிங்கே பிரதமாக பதவி ஏற்றார்.
பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், மைத்திரிபால சிறிசேனா கட்சி ஆட்சியில் இருந்து நேற்று திடீரென விலகியது. அத்துடன் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார் சிறிசேனா.
இந்த திடீர் அரசியல் திருப்பத்தைத் தொடர்ந்து, அதிபர் சிறிசேனா முன்னிலையில் ராஜபக்சே இலங்கை பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.