அண்ணனுடன் கைகோர்க்கும் தனுஷ்- புதுப்பேட்டை 2 க்கான அஸ்திவாரமா?

இயக்குநர் மற்றும் தனுஷின் அண்ணனான செல்வராகவனுடன் தனுஷ் மீண்டும் இணையவுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்துள்ளது.

இதனை தொடர்ந்து, தனுஷ் ஒரு சரித்திர படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் பணிகள் நிறைவடைந்தவுடன், ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அடுத்ததாக வெற்றிமாறனுடன் இணையும் தனுஷ், அடுத்த ஆண்டு இறுதியில், அண்ணன் செல்வராகவன் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடசென்னை வெற்றி பெற்றதால், தனுஷின் ஆல்டைம் ஃபேவரைட் படமான புதுப்பேட்டை பார்ட் 2 வாக அந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன.

7ஜி காலனி, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், மாலை நேரத்து மயக்கம் ஆகிய படங்களில் தனுஷ்தான் முதல் தேர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More News >>