தாஜ்மஹாலை பார்க்க 40ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி!

உலக அதிசயங்களுல் ஒன்றான தாஜ்மஹாலுக்குள் நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது தாஜ்மஹாலுக்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில் நெரிசல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து புதுதில்லியில் மூத்த உயரதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் வரும் 20-ஆம் தேதி முதல் தாஜ்மஹாலுக்குள் நாளொன்றுக்கு 40ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ள 15 வயதிற்கு உட்பட்டோர்களும் அடங்குவார்கள்.

சுற்றுச்சூழல் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டும், நெரிசலைத் தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

More News >>