இன்றைய (27.10.2018) ராசிபலன்கள்
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.
மேஷம்:மேஷ ராசி நேயர்களே, வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மனதில் புதிய தெம்பும், உற்சாகமும் உண்டாகும். பேச்சு திறமையால் பல காரியங்களை சாதிப்பீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்:ரிஷப ராசி நேயர்களே, குடும்ப சலசலப்புகள் மறையும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உத்யோகத்தில் இட மாற்றம் ஏற்படும்.
மிதுனம்:மிதுன ராசி நேயர்களே, முக்கிய காரியங்கள் இனிதே நடைபெறும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பழைய கடன் பிரச்சனை தீர புது வழி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அளவான லாபம் கிடைக்கும்.
கடகம்:கடக ராசி நேயர்களே, வரவை விட செலவுகள் அதிகமாகும். கணவன் மனைவி உறவுநிலை திருப்தி அளிக்கும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்படும். கூட்டுத் தொழில், வியாபாரம் சிறக்கும்.
சிம்மம்:சிம்ம ராசி நேயர்களே, பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். கணவன் மனைவி உறவில் மன வேற்றுமை வந்து மறையும். எதிர்பாராத வகையில் செலவுகள் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
கன்னி:கன்னி ராசி நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். தாராள பணவரவு இருக்கும். யாரையும் நம்பி உறுதி மொழி தரவேண்டாம். தொழில், வியபாரத்தில் போட்டி, பொறாமை குறையும்.
துலாம்:துலாம் ராசி நேயர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். உத்யோகத்தில் உள்ள நெளிவு சுளிவுகள் புரிய வரும்.
விருச்சிகம்:விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். நல்லவர்களின் நட்பால் நன்மை உண்டு. பழைய வீட்டை சீரமைக்க முடியும். உத்யோகத்தில் உங்கள் பலம் கூடும்.
தனுசு:தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும்.
மகரம்:மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். சொத்து பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபல நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்.
கும்பம்:கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். மனதில் தெளிவு நிலை பிறக்கும். பெற்றோரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் உயந்த நிலையை எட்ட முடியும்.
மீனம்:மீன ராசி நேயர்களே, ஆன்மீக வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டு. சாமர்த்தியமாக பேசி நினைத்ததை சாதிக்க முடியும். உத்யோகத்தில் பல நல்ல சலுகைகள் கிடைக்கும்.