போஸ்டரே ஒழுங்கா டிசைன் பண்ண தெரியல- கடுப்பில் தல ரசிகர்கள்!

விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் மிகப் பெரிய ஓட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவா – அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகி வரும் படம் விஸ்வாசம். வீரம் படத்தை தவிர மற்ற இரு படங்களும் படு தோல்வியை தழுவிய நிலையில் அஜித் மீண்டும் சிவாவுடன் விஸ்வாசம் படத்தில் கூட்டணி வைத்தது தல ரசிகர்கள் பலருக்கும் அதிருப்தியையே கொடுத்தது.

ஆனாலும், அஜித் சரியான முடிவெடுப்பார் என்ற நம்பிக்கையில், விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை திருவிழாவாக கொண்டாடினர். செகண்ட் லுக் போஸ்டர் ரிலீசுக்கும் திருவிழா களை கட்டியது. ஆனால், போஸ்டரில் உள்ள ஓட்டை திருவிழாவை திசை திருப்பியுள்ளது.

1000 கணக்கில் யூடியூப் விமர்சகர்கள் வந்துவிட்ட இந்த காலக் கட்டத்தில் போஸ்டர் விட்டால் கூட அது வெளிநாட்டு போஸ்டரின் காப்பியா? அதில் என்னவெல்லாம் ஒளிந்திருக்கிறது என நோண்டி நொங்கெடுத்து வரும் நிலையில், செகண்ட் லுக் போஸ்டரில், அஜித்துக்கு பின்னாடி ஓடி வரும் நபர்கள் அந்த மக்கள் கூட்டம் அனைத்துமே காப்பி பேஸ்ட் செய்து வைக்கப்பட்டுள்ளது. அப்பட்டமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொங்கல் பானையை வைக்கும் பழைய மாடல் போஸ்டரை ரசனைக்குரிய ஒன்றாக மாற்ற தவறியது. இதையறிந்த விஜய் ரசிகர்கள் போஸ்டரை ஓட்ட துவங்கினர். இதனால், அஜித் ரசிகர்கள் கடும் கடுப்பிலும், கோபத்திலும் உள்ளனர்.

ஏற்கனவே படம் எப்படி வரும் என்ற டென்ஷனில் உள்ள அவர்களுக்கு போஸ்டர் டிசைன் கூட ஒழுங்கா செய்யத் தெரியாத இந்த படக்குழுவினருக்கு என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More News >>