கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்- கே பி. அன்பழகன்
தமிழக அரசுக் கல்லூரிகளிலுள்ள 2000 அதிகமான கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்- கே பி. அன்பழகன்
உயர்கல்வித்துறையில் புதிய பாடப்பிரிவுகள், கூடுதல் இடங்கள் மற்றும் இட ஒதுக்கீடு ஆகியவற்றின் காரணமாக மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து இருப்பதாக அமைச்சர் கே பி. அன்பழகன் கூறினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் 137 மாணவ மாணவிகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன் அரசுக் கல்லூரிகளிலுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.