கால்பந்தாட்ட ஜாம்பவான் நெய்மருக்கு சூப்பர் ஹீரோக்களை இந்த அளவுக்கு பிடிக்குமா
பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மர் சூப்பர் ஹீரோக்களை டாட்டூவாக தனது முதுகில் போட்டுள்ளார்.
பிரேசில் கால்பந்தாட்ட ஜாம்பவான் நெய்மர் பலருக்கு ரியல் சூப்பர் ஹீரோவாக திகழ்கிறார். இவருக்கு பிடித்த காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்கள் யார் தெரியுமா? ஸ்பைடர்மேன் மற்றும் பேட்மேன் தான்.
ஸ்பைடர்மேன், பேட்மேன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடிக்கும், இந்நிலையில், இந்த இரு சூப்பர் ஹீரோக்களின் தீவிர ரசிகன் உலகிலேயே தாம் தான் என நிரூபிக்கும் வகையில், பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர், தனது முதுகின் ஒரு புறத்தில் ஸ்பைடர்மேனையும், மற்றொரு புறத்தில் பேட்மேனையும் டாட்டூவாக வரைந்துள்ளார்.
இன்ஸ்டாவில் இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது.