ஒடிசாவில் உயரழுத்த மின்சாரம் தாக்கி 7 யானைகள் பலி

ஒடிசா மாநிலத்தில் உயரழுத்த மின்சாரம் தாக்கி 7 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

தென்கால் மாவட்டம் கமலங்கா கிராமத்திற்கு 13 யானைகள் வந்துள்ளன. அவை வனத்தையொட்டிய காட்டு வழியாக சென்று உணவு, தண்ணீர் தேடி வயல்வெளிக்குள் புகுந்துள்ளன. அப்போது பாதையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த உயரழுத்த மின் வேலியில் சிக்கி 7 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சமந்தப்பட்ட தோட்டத்திற்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர்.

ஒடிசாவில் கடந்த 18 ஆண்டுகளில் மட்டும் மின்சாரம் தாக்கி 170 யானைகள் உயிரிழந்திருப்பதாக தெரிகிறது. யானைகளின் உயிரை பறிக்கும் மின் வேலிகளை தடை செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More News >>