40 லட்சம் கடன்- கொடுத்தவரை கொன்று 25 துண்டுகளாக்கிய கொடூரம்

வாங்கிய 40 லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தர இயலாததால் கடன் கொடுத்த நண்பரை கொன்றவர், பிறகு தம் மனைவியையும் கொலை செய்துள்ளார்.

இது பற்றி ஹரியானா காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹரியானா மாநிலம் குருகிராம் என்னும் குர்ஹானில் வசிப்பவர் ஹர்னேக் சிங். அவரது மனைவி குர்மெஹர் கௌர். ஹர்னேக் சிங், தமது நண்பர் ஜாஸ்கரன் சிங்கிடம் வியாபாரத்திற்காக 40 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பித் தரும்படி ஜாஸ்கரன் சிங் பலமுறை கேட்டுள்ளார். கடனை திருப்பிக் கொடுக்காததல், ஹர்னேக் சிங்கின் வீட்டுக்கு அக்டோபர் 14ம் தேதி ஜாஸ்கரன் சிங் நேரில் சென்றுள்ளார்.

வீட்டுக்கு வந்த ஜாஸ்கரனை, ஹர்னேக் தம் மனைவி குர்மெஹர் மற்றும் ஒரு நண்பருடன் சேர்ந்து கட்டி வைத்து கொலை செய்துள்ளார். பின்பு ஜாஸ்கரன் சிங்கின் உடலை 24 முதல் 25 துண்டுகளாக வெட்டி, இரண்டு பிளாஸ்டிக் பைகளில் கட்டுக்கொண்டு தங்கள் சொந்த ஊரான லூதியானாவுக்குப் புறப்பட்டுள்ளனர்.

லூதியானாவுக்குச் செல்லும் வழியில் ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் உடல்ன் துண்டுகளை வீசியுள்ளனர். மீண்டும் குருகிராமுக்கு திரும்பிய பின்னர், ஹர்னேக் சிங்கிற்கு காவல்துறை தங்களை பிடித்து விடும் என்ற எண்ணம் ஏற்பப்ட்டுள்ளது. ஆகவே, மனைவி குர்மெஹரிடம், இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற கூறியுள்ளார்.

முதலில் ஒத்துக்கொண்ட மனைவி, பிறகு மறுத்துள்ளார். ஆகவே, அக்டோபர் 22ம் தேதி ஹர்னேக் சிங், தமது மனைவி குல்மெஹரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். தம் மீதும் காயம் ஏற்படுத்திக்கொண்ட ஹர்னேக் சிங், கொள்ளையர்கள் தம் மனைவியை கொன்று, தம்மை காயப்படுத்தி, வீட்டை கொள்ளையடித்து விட்டுச் சென்றுள்ளதாக காவல்துறையிடம் கூறியுள்ளார்.

மனைவியை கொன்ற கொள்ளையர்கள், இவரை காயப்படுத்தியதோடு ஏன் விட்டு விட்டார்கள் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்த விசாரணையில் தம் மனைவியை கொலை செய்ததை ஹர்னேக் சிங் ஒப்புக்கொண்டுள்ளார் என்று குருகிராம் காவல்துறையின் மக்கள் தொடர்பு அலுவலர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடன் கொடுத்தவரோடு, தம் மனைவியையும் வர்த்தகர் கொன்ற விவகாரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More News >>