சபரிமலை தீர்ப்பு: ஆசிரமத்துக்கு தீ வைத்த சங்பரிவார அமைப்பினர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்த ஆசிரமத்துக்கு த தீவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்த ஆசிரமத்துக்கு  தீவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரளாவில் உள்ள சுவாமி சந்தீபா நந்தா கிரி  வரவேற்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சங் பரிவார அமைப்பினர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் திருவனந்தபுரம் புறநகர்ப்பகுதியில் உள்ள சுவாமி சந்தீபாநந்தா கிரி ஆசிரமத்திற்கு தீவைத்தனர்.

இதில் சந்தீபா நந்தா கிரி பகவத் கீதை பள்ளிக்குச் சொந்தமான இரண்டு கார்களும் ஒரு ஸ்கூட்டரும் தீயில் கருகி சாம்பலாயின. உள்ளூர் ஊடகங்களின் தகவல்களின் படி வெள்ளை மாருதி சுசுகி ஆம்னி, ஹோண்டா சிஆர்வி கார்களுக்கு தீ வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இததொடர்ந்து  இன்று காலை ஆசிரமத்தை நேரில் பார்வையிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் “கொள்கை ரீதியாக எதிர்கொள்ள முடியாத போது இது போன்ற வன்முறைச் சம்பவங்களைத்தான் கையில் ஏடுக்கின்றனர்.  சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் எந்த ஒருவரையும் விட்டுவிட மாட்டோம். சந்தீபாநந்தா கிரியின் நடவடிக்கைகள் மீது சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் ஆசிரமத்தைத் தாக்கியுள்ளனர்” என்றார்.

கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக்  இது கொலை முயற்சி என்று குற்றம்சாட்டினார். “சுவாமி சந்தீபாநந்தா கிரி சங்பரிவாரத்தின் நிலைப்பாடுகளை மதிப்பு மிக்க முறையில் எதிர்த்து வந்தார்.  இவரையும் இன்னொருவரையும் தாக்குதல் நடத்தியுள்ளனர், ஆசிரமம் முழுதும் தீயில் கருகி விட வேண்டும் என்பதே நோக்கம். வெளியேயிருந்து மக்கள் தீவைப்புப் பற்றி சுவாமிஜிக்கு தெரியப்படுத்திய பிறகுதான் அவருக்குத் தெரிய வந்துள்ளது. ஆனால் தீயணைப்புப் படையினர் விரைவில் சம்பவ இடத்துக்கு வந்ததால் உயிர்ச்சேதம் இல்லை.  உண்மையான பக்தர்களையும் கூட இவர்கள் இப்படித்தான் தாக்குவார்கள்” என்று கூறினார்.

அனைத்து பெண்களும் சபரிமலைக்கு வரலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்த சந்தீபாநந்தா கிரிக்கு பெரிய அச்சுறுத்தல் மற்றும்   கொலை மிரட்டல்களும் வந்தது குறிப்பிடத்தக்கது.

More News >>