வெடிகுண்டு பார்சல் ஊடகங்கள் மீது குற்றசாட்டு- அதிபர் டிரம்ப்

ஒபாமா ஹிலாரி உள்ளிட்டோருக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்ட விவகாரத்தைக் கொண்டு தனக்கு எதிரான அரசியல் சூழலை உருவாக்க ஊடகங்கள் முயற்சித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அவருடைய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கிலாரி கிளிண்டனுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும். இந்நிலையில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளிக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருள் பார்சல்களை இடைமறித்து அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றினர்.

அந்த பார்செல்களில் இருந்த வெடிப்பொருள் அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸ் வீட்டில் கடந்த திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருட்களை ஒத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் ஆதரவாளரான செசர் சயோக்  கைது செய்யப்பட்ட நிலையில் வடக்கு கரோலினா மாநிலம் சார்லோட்டே  நகரில் கூட்டம் ஒன்றில் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப் அரசியல் வன்முறை நிச்சயமாக சகிக்க முடியாதது என்று தெரிவித்தார். எனினும் யாரோ ஒரு தனிப்பட்ட நபரின் குற்ற நடவடிக்கைகளுடன் தன்னை தொடர்பு படுத்தி ஊடகங்கள் தனக்கு எதிரான அரசியல் சூழலை உருவாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

More News >>