மீண்டும் மெர்சல் கூட்டணி படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?
சர்கார் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திற்கு ஆளப்போறான் தமிழன் என்ற டைட்டில் வைக்கவுள்ளதாக தகவல்.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள சர்கார் படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான தெறி மற்றும் மெர்சல் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதிலும், மெர்சல் படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் பாடல் விஜய்யின் ஆல்டைம் ஃபேவரைட்டாக மாறியுள்ளது. அட்லி இயக்கவுள்ள புதுப்படத்திற்கு ஆளப்போறான் தமிழன் என்ற டைட்டிலேயே வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்கார் படத்தை தொடர்ந்து, ஆளப்போறான் தமிழன் என்றால், அதுவும் நிச்சயம் அரசியல் பேசும் மாஸ் கமர்ஷியல் படமாகவே அமையும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
இந்த முறையாவது பழைய படங்களில் இருந்து கதையை சுடாமல் அட்லி விஜய்க்கு ஒரு நல்ல கதையை தருவாரா என்பது பில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.