சன்டே ஸ்பெஷல் : நூடுல்ஸ் பிரியாணி..!

ஞாயிறுக் கிழமை என்றாலே ஸ்பெஷல்தான், இன்று கொஞ்சம் ஸ்பெஷலாக்க நூடுல்ஸ் பிரியாணி செய்து சாப்பிடுவோம். கொஞ்சம் வித்தியாசமானதுதான் ஆனால் சுவை பிரமாதமானது. குழந்தைகள் அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய உணவு. சரி செய்து சாப்பிடலாமா?

தேவையானப் பொருட்கள்:

கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் (பிளெய்ன்)  - 2 கப் (ஒரே சீராக உடைத்தது), பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ் (எல்லாம் சேர்ந்தது) - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைத்துக்கொள்ள:

துருவிய தேங்காய் - கால் கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய துண்டு, சோம்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த வெந்தயக்கீரை- 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, முதலில் காய்கறிகளை வதக்கி, பின்னர் நூடுல்ஸை சேர்த்து வதக்கி, முக்கால் கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வெந்ததும் (இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்), அரைத்த விழு தினைச் சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் எல்லாமாகச் சேர்த்து வெந்துவிடும். அப்போது எலுமிச்சைச் சாற்றினை விட்டு கலந்து, கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

விருப்பப்பட்டால், இஞ்சி - பூண்டு விழுதை வதக்கி சேர்க்கலாம்.

More News >>