தெலங்கானாவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காவல்துறையினர்

தெலங்கானாவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த ஆந்திர காவல்துறையினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

டிசம்பர் மாதம் தெலங்கானா மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அங்கு தேர்தல் கூட்டணி, தேர்தல் பிரச்சாரம் ஆகியவை சூடு பிடித்துள்ளது. அதன்படி, தெலங்கானா ராஷ்ட்டீரிய சமிதி, தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜெகீத் யாலா மாவட்டம் தர்மபுரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 3 பேரை தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியினர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதே போல மஞ்கீர்யாலா தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 3 பேரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் 6 பேரும் ஆந்திர காவல்துறையில் பணிபுரியும் நாராயண ரெட்டி, மதுபாபு, வெங்க டேஷ்வரராவ், ராமகிருஷ்ண ரெட்டி, ராம்பாபுஎன்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இது குறித்து அம்மாநில காபந்த முதலமைச்சராகிய சந்திரசேகரராவ் அவர்களின் மகனும், அமைச்சருமான தாரகராம ராவ் கூறுகையில், தெலங்கானா சட்டசபை தேர்தலில் ஆந்திர காவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர்.

ஆந்திர காவல்துறையினரின் தலைமை அலுவலகம் ஹைதராபாத்தில் உள்ளது. அங்கு செல்லாமல் தெலங்கானா மாநில மைய பகுதியில் உள்ள தொகுதிகளில் ஆந்திர காவல்துறையினருக்கு என்ன வேலை இருக்கிறது என்றார்.

More News >>