இந்திய திரைப்படங்களை ஒளிபரப்ப தடை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள், தொடர்களை ஒளிபரப்ப தடை விதித்து தலைமை நீதிபதி சாஹிப் நிஷார் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பாகிஸ்தானில் இந்திய படங்களுக்கும், தொடர்களுக்கும் மவுசு அதிகம். அதனால், உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள ஒளிபரப்பப்படுவதை தடை செய்யக்கோரி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, தலைமை நீதிபதி சாஹிப் நிஷார், பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டத்தை இந்தியா குறைத்துக்கொண்டபோது, நாம் ஏன் அவர்களுடைய திரைப்படங்களுக்கு தடை விதிக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

பிறகு, பாகிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய திடைப்படங்கள் மற்றும் தொடர்களை ஒளிபரப்ப தடை விதித்து தலைமை நீதிபதி சாஹிப் நிஷார் தீர்ப்பு வழங்கினார்.

More News >>