குவைத்தில் கைது செய்யப்பட்ட 124 வெளிநாட்டினர்!

குவைத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளி நாட்டினர் 124 பேர் போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

குவைத் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது 124 பேரை கைது செய்துள்ளனர். அதில் 29 பேர் அப்பாவிகளாகும். இவர்களின் ஸ்பான்சர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களுடைய குடியுரிமை அட்டையை புதுப்பிக்க இயலாமல் தவித்து வந்துள்ளனர். அவர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து விதி மீறல், பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

குவைத் அரசு சட்டத்திற்கு விரோதமாக உள்ள வெளிநாட்டவர்கள் 2018 ஜனவரி 29 முதல் பிப்ரவரி 22 வரை தங்களது ஆவணங்களைச் சமர்ப்பித்து எந்த அபராதமும் இல்லாமல் பொது மன்னிப்பு பெற்று சொந்த நாடுகள் திரும்பி செல்லலாம் என்று தெரிவித்து இருந்தது.

அதே நேரம் ரெசிடென்சி விதிமீறல் பிரச்சனைகள் காரணமாக நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விசா காலம் முடிந்தும் சொந்த நாடுகள் திரும்பி செல்ல முடியாமல் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லாததால் அருகில் உள்ள ரெசிடென்சி விவகாரத் துறையினை அணுகுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய காலக்கெடு ஏப்ரல் 22, 2018 வரை மீண்டும் நீட்டிக்கப்படடது குறிப்பிடத்டக்கது.

More News >>