2.0 டிரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?

ஷங்கரின் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அக்‌ஷய்குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

500 கோடி ரூபாய்க்கும் மேல் பிரம்மாண்ட செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம் 2.0. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக இதில் எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

நவம்பர் 29ம் தேதி படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வரும் நவம்பர் 3-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இதன் படப்பிடிப்பு நீண்ட காலத்துக்கு முன்பே முடிவடைந்துவிட்டாலும், கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகிவிட்டன. நவம்பர் 29-ம் தேதி படம் வெளியாகவுள்ளதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியிருக்கிறது படக்குழு.

இந்தியா மட்டுமன்றி உலகளவில் தமிழ் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இந்தப் படத்தை வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

 

More News >>